சியோல்: அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளை சமாளிக்க அணு ஆயுதப்படை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வோம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வட கொரியா நேற்று பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய ராணுவம் கூறியது. வட கொரியாவின் தலைநகரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழுவதற்கு முன்பு 360 கிலோமீட்டர்கள் பறந்து சென்றதைக் கண்டதாக தென் கொரியாவின் ராணுவ கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.
The post வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.