×
Saravana Stores

மோடியின் புதிய காஷ்மீர் கனவு நிறைவேறாது: சிறையில் இருந்து வெளியே வந்த எம்பி பேட்டி

புதுடெல்லி: மோடியின் புதிய காஷ்மீர் கனவு நிறைவேறாது என்று திகார் சிறையில் இருந்து விடுதலையான எம்பி ரஷீத் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், இன்ஜினியரான ரஷீத் என்பவர் புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து கொண்டே லோக்சபா தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு ெவற்றி பெற்றார். தற்போது பாரமுல்லா எம்பியாக இருக்கும் ரஷீத்துக்கு, டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்று அவர் ஜம்மு காஷ்மீர் செல்லும் நிலையில், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வரும்போது அளித்த பேட்டியில், ‘​​காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்.

காஷ்மீரிகள் கல்லெறிபவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்ததை, பெருமையாகவும் உணர்கிறேன். என் மக்கள் தோல்வியுற விடமாட்டேன். பிரதமர் மோடியின், ‘புதிய காஷ்மீர்’ என்ற கருத்துக்கு எதிராக போராடுவேன். கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மோடி செய்ததை மக்கள் நிராகரித்துள்ளனர். எங்களின் அரசியல் உரிமைகளுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மக்கள் முக்கியமான காலகட்டத்தில் உள்ளனர். அங்கு நடக்கும் பேரவை தேர்தல் முக்கியமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்வார்கள்’ என்றார்.

 

The post மோடியின் புதிய காஷ்மீர் கனவு நிறைவேறாது: சிறையில் இருந்து வெளியே வந்த எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Rashid ,Tihar ,Jail ,Delhi ,
× RELATED பொய்யான வெற்று வாக்குறுதிகளை அள்ளி...