×
Saravana Stores

மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

வருசநாடு: கடமலைக்குண்டு மூல வைகையில் சாக்கடை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் போன்ற பகுதிகளில் மூல வைகை ஆற்றின் கரைகளில் பல கிராமங்கள் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் பொதுமக்கள் குப்பைகளாக போட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆறு அனைத்தும் மாசடைந்து வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலவைகை ஆற்றில் வீசப்படுவதுதான். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Mula Vaigai river ,Varusanadu ,Kadamalaikundu Mola Vaigai ,Mula Vaigai ,Kandamanur ,Kadamalaikundu ,Mayiladumparai ,Singarajapuram ,Kadamalai ,Mylai ,Union ,Dinakaran ,
× RELATED மயிலாடும்பாறை அருகே பாசிபடர்ந்த...