- யூனியன்
- பேரூர்
- முப்பெரும் விழா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுகுல்
- திமுக முப்பெரும் விழா
- முதல் அமைச்சர்
- திமுகா
- நகரம்
- பிராந்தியம்
சென்னை: திமுகவில் மண்டல அளவில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூரில் சிறப்பாக பணியாற்றும் தலா ஒருவருக்கு நற்சான்று, பணமுடிப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் வரும் 17ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு திமுக பவள விழா ஆண்டு திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த முப்பெரும் விழா வருகிற 17ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றுகிறார். விழாவில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது- எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது- கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது- வி.பி.இராஜன் ஆகியோர் பெறுகின்றனர். திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழாவை கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து-இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது” தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார். மேலும் விழாவில் திமுக விருதுக்காக தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம் பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று, பணமுடிப்பு வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக முப்பெரும் விழாவிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளதால் விழாவிற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அனைவரும் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளது. மேலும் உணவு, குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது. விழாவை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் மெகா டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளது.
The post மண்டல அளவில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூரில் சிறப்பாக பணியாற்றும் திமுகவினருக்கு நற்சான்று, பணமுடிப்பு: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் appeared first on Dinakaran.