×

மகளிர் டி20 உலககோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு


வெல்லிங்டன்: ஐசிசி நடத்தும் 9வது மகளிர் டி20 உலககோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் வருகிற அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறது. உலககோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா தங்களது அணிகளை அறிவித்துள்ள நிலையில் நியூசிலாந்து 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்தது.

இதில் சோபி டிவைன்(கேப்டன்), சுசி பேட்ஸ், மேடி கிரீன், லீ காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், ப்ரூக் ஹாலிடே, இஸி கேஸ், ஈடன் கார்சன், பிரான் ஜோனாஸ், மோலி பென்போல்ட், ஜார்ஜியா பிலிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹூ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

The post மகளிர் டி20 உலககோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup ,New Zealand ,Wellington ,ICC Women's T20 World Cup ,Dubai ,Sharjah ,World Cup ,India ,Pakistan ,England ,West Indies ,Dinakaran ,
× RELATED இங்கி வீரர் 123 ரன் எடுத்து அதிரடி: ஹேரி...