வெள்ளக்கோவில், செப். 10: வெள்ளக்கோவிலில் முருங்கை மார்க்கெட்டுக்கு 13 டன் வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.10 விற்பனையானது.தமிழகத்தில் கொடி முருங்கை,செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என நான்கு வகை முருங்கைகள் உள்ளன. இவற்றில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
வெள்ளக்கோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை,சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். கடந்த வாரம் 15 டன் வரத்தானது. மர முருங்கை ரூ.10 க்கும், கரும்பு முருங்கை ரூ.16க்கும் விற்பனையானது. 13 டன் வரத்தானது, மர முருங்கை ரூ.10 க்கும், கரும்பு முருங்கை ரூ.16 க்கும் விற்பனையானது.
The post முருங்கை 13 டன் வரத்து கிலோ ரூ.10 க்கு விற்பனை appeared first on Dinakaran.