×
Saravana Stores

வெள்ளகோவிலில் மூளைச்சாவு அடைந்த பைனான்ஸ் அதிபரின் உடல் உறுப்புகள் தானம்

*அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

வெள்ளகோவில் : வெள்ளகோவிலில் மூளைச்சாவு அடைந்த பைனான்ஸ் அதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமரவடிவேல் (56). இவர் கேரளாவில் தலைச்சேரி என்ற இடத்தில் பல ஆண்டு காலமாக பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி அருகே வசூலுக்கு சென்றபோது வாகன விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் காணாததால் பிழைக்க வாய்ப்பு இல்லை மருத்துவர்கள் தரப்பில் கூறியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து குமரவடிவேலின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்களது விருப்பத்தின் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வந்து உடல் உறுப்புகளை தானம் செய்தனர். அதன்பிறகு நேற்று சொந்த ஊரான மூத்தாம்பாளையத்தில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு சார்பில்தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா, காங்கயம் வட்டாட்சியர் மோகனன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும், நவநிதி, நித்யா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

The post வெள்ளகோவிலில் மூளைச்சாவு அடைந்த பைனான்ஸ் அதிபரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,CEO ,Kumaravadivel ,Vikhaambalayam ,Vellakovil, Tirupur district.… ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்