×

சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்

சிவகங்கை, செப்.10: சிவகங்கை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணியை ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்.

காலை 10.40 மணிக்கு சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் மாவட்ட இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார். பகல் 11மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். பகல் 1 மணிக்கு காளையார்கோவில் தாலுகா நகரம்பட்டியில் நடைபெற்று வரும் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் நினைவு மண்டப கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார்.

பகல் 1.30 மணிக்கு திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற்று வரும் காந்தியடிகள், ஜீவா நினைவு மண்டப கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். மாலை 4:30மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முன்னதாக இன்று காலை 9மணி அளவில் மதுரையில் இருந்து வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்கையான பூவந்தியில் சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Sivagangai district ,Sivagangai ,Minister ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் திட்டப்பணிகளை...