×

மாவத்தூரில் ஊரக வேலையில் நாட்கள் அதிகரிக்க கோரிக்கை

 

கரூர், செப். 10: மாவத்தூர் ஊராட்சியில் ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி கலெக்டரிடம் அந்த கிராமத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சி பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:மாவத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எங்கள் கிராம மக்களுக்கு இதுநாள் வரை 100 நாள் வேலை கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்தில், நீர்வழித் தடங்களை சீரமைக்கவும், குளத்தை சீரமைக்கவும் 100 நாள் வேலை வாய்ப்பை பயன்படுத்தி நிலத்தடி நீரை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரம் சிறக்க 100 நாள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post மாவத்தூரில் ஊரக வேலையில் நாட்கள் அதிகரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mavathur ,Karur ,Mavathur panchayat ,People's Grievance Day ,Kadavur circle ,
× RELATED கரூர் – திருச்சி சாலையில் விபத்து...