- பெங்களூரு
- ராமேஸ்வரம்
- பாஜக
- என்.ஐ.ஏ.
- தேசிய புலனாய்வு அமைப்பு
- ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல்
- பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே
பெங்களூரு: ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு குற்றவாளிகள் பெங்களூருவில் உள்ள மாநில பாஜ தலைமை அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்தாக தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர் உள்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியை சேர்ந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவீர் உசேன் ஷாஜீத் ஆகியோரை கைது செய்தது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்த அதே நாளில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்ததாகவும், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடந்த நாளில் வெடிகுண்டு வைக்கும் அசம்பாவித சம்பவம் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட் டுள்ளது.
The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு குற்றவாளிகள் பாஜ அலுவலகத்தை தகர்க்க சதி: என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல் appeared first on Dinakaran.