×
Saravana Stores

அகிலம் காப்பாள் ஆதிநாயகி

ஸ்ரீமந் நகர நாயிகா

நாம் ஸ்ரீமந் நகர நாயிகா என்கிற நாமத்தின் தொடர்ச்சியை பார்த்துக் கொண்டே வருகின்றோம். சென்ற இதழில் ஸ்ரீநகரத்திலுள்ள ஒவ்வொரு கோட்டையாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியே இது. முத்துக் கோட்டைக்கு அடுத்ததாக, மரகதத்தாலேயே ஆன கோட்டை இருக்கிறது. அந்த மரகதத்தாலேயே ஆன கோட்டைக்கு பக்கத்தில் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் இரண்டு மாளிகைகள் இருக்கின்றன. இரண்டு மாளிகைகள் யாருடைய மாளிகை எனில், ஒரு மாளிகை அம்பாளுடைய மந்த்ரிணீயாக இருக்கக் கூடிய மாதங்கி, ராஜ சியாமளாவினுடைய மாளிகை. இன்னொரு மாளிகை அம்பிகையினுடைய சேனாதிபதியாக இருக்கக் கூடிய தண்டநாதா என்று சொல்லக்கூடிய மஹாவாராஹியினுடைய மாளிகை. இப்படியாக இரண்டு கோட்டைகள் உள்ளன. ராஜ சியாமளா என்பது அம்பிகையினுடைய மந்த்ரிணீ ஸ்தானம், இன்னொன்று வாராஹி என்பது அம்பாளுடைய சேனாதிபதி ஸ்தானம்.இதற்கு அடுத்தபடியாக இருக்கக் கூடியது, பவழத்தால் ஆன ஒரு கோட்டை. பவழத்தால் ஆன கோட்டைக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்களெனில், சரஸ்வதியோடு பிரம்மா எழுந்தருளியிருந்து அங்கு சிருஷ்டி செய்வதற்காக அம்பிகையை உபாசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கு அடுத்து நவரத்தினக் கோட்டை ஒன்று இருக்கிறது. மேலே ஒவ்வொரு கோட்டையையும் தனித்தனியாகப் பார்த்தோம். இப்போது ரத்தினங்களையும் சேர்த்து ஒரு கோட்டை கட்டினால் எப்படியிருக்குமோ அது போன்றதொரு கோட்டை இது. அந்த நவரத்தினத்திற்குரிய கோட்டைக்கு பக்கத்தில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் யார் இருக்கிறார்களெனில், மஹாலட்சுமியோடு சேர்ந்து மஹாவிஷ்ணு அம்பாளை உபாசித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்திதி காரியங்கள் நடைபெறுவதற்காக வேண்டி உபாசனை செய்து கொண்டிருக்கிறார்.இதற்கு அடுத்து நாநா ரத்தினக் கோட் டை. இப்போது நாநா ரத்தினங்கள் என்றால், நவரத்தினங்கள் தவிர இன்னும் நிறைய ரத்தினங்கள் இருக்கின்றன. இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத, பெயரிடப்படாத நிறைய ரத்தினங்கள் இருக்கின்றன. இதற்கு நாநா ரத்தினக் கோட்டை என்று பெயர். இதற்கு அடுத்துள்ள தோட்டத்தில் பவானி தேவியோடு ருத்ரன் எழுந்தருளியிருந்து சம்ஹார காரியம் பண்ணுவதற்காக அம்பாளை உபாசனை செய்து கொண்டிருக்கிறார்கள். பவானியும் ருத்ரனும் நாநா ரத்தினக் கோட்டைக்கு பக்கத்திலிருக்கிற கோட்டையிலிருந்து அம்பாளை உபாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.முதல் எட்டு கோட்டை என்பது உலோகங்களால் ஆனது என்று பார்த்தோம். அதற்கு பதினோரு கோட்டை என்பது ரத்தினங்களால் ஆனது என்று பார்த்தோம். அதற்கடுத்து நாம் பார்க்கக் கூடிய இருபதாவது கோட்டையிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். முதலில் உலோகங்கள் என்று சொல்லியாயிற்று. அடுத்தது ரத்தினங்கள் என்று பார்த்தோம்.இப்போது இருபதாவது கோட்டைக்குள் நுழைகின்றோம். இருபதாவது கோட்டையானது மனோமயக் கோட்டையாகும். அதாவது மனதாலேயே ஒரு கோட்டை கட்டினால் எப்படியிருக்குமோ அதுபோன்றிருக்கும். இப்போது இந்த மனோமயக் கோட்டைக்கும் நடுவே ஒரு வாபிகைகள் இருந்தது என்று பார்த்தோம். இப்போது இந்த ஆறு கோட்டைகளுக்கு நடுவே என்ன இருக்குமெனில், நீர் நிலைகள் இருக்கும். அதாவது, அரண்மனைகளை சுற்றி அகழி வைப்பார்கள்.

அந்த அகழியைச் சுற்றி தண்ணீர் தேக்கி வைப்பார்கள். அந்த மனோமயக் கோட்டைக்கு நடுவே ஒரு நீர் நிலை இருக்கிறது. அந்த நீர் நிலைக்கு வாபிகை (vapika) என்று பெயர். வாபிகைகள் என்றால் நீர் நிலைகள் என்று அர்த்தம். இந்த மனோமயக் கோட்டைக்கு பக்கத்திலிருக்ககூடிய வாபிகைக்கு அம்ருத வாபிகை என்று பெயர். அம்ருத வாபிகையில் தாரா தேவி எழுந்தருளியிருக்கிறாள்.இதற்கு அடுத்து இருக்கக்கூடிய புத்திமயக் கோட்டை. இந்த புத்திமயக் கோட்டைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய அந்த வாபிகைக்கு ஆனந்த வாபிகை என்று பெயர். அந்த ஆனந்த வாபிகையில் அமிர்தேசி என்கிற சொரூபத்தில் ஒரு தேவதை எழுந்தருளியிருக்கிறாள். இதற்கு அடுத்து அகங்காரக் கோட்டை ஒன்று இருக்கிறது. இந்த அகங்காரக் கோட்டைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய வாபிகைக்கு விமர்ச வாபிகை என்று பெயர். இந்த விமர்ச வாபிகையில் யார் இருக்கிறாள் எனில் குருகுல்லா என்கிற தேவதை இருக்கிறாள்.இதற்கு அடுத்ததாக சூரிய மண்டலத்தாலேயே ஒரு கோட்டை இருக்கிறது. இதற்கு அடுத்து சந்திர மண்டலத்தாலேயே ஒரு கோட்டை. இதற்கு அடுத்து இருபத்தைந்தாவதாக சிருங்காரத்தாலேயே இருக்கக்கூடிய கோட்டை.சூரிய மண்டலத்தாலேயே இருக்கக் கூடிய ஒரு கோட்டை சொன்னோமே, அதற்குப் பக்கத்தில் யார் இருக்கிறார்களெனில், மார்த்தாண்ட பைரவர் என்று சொல்லக் கூடிய சூரியன் அங்கு இருக்கிறார். நாம் யாரை சூரிய நாராயணர் என்று சொல்கிறோமோ அவருக்கு ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில் மார்த்தாண்ட பைரவர் என்று பெயர்.

மார்த்தாண்ட பைரவர் தன்னுடைய பத்தினிகளான சாயா தேவி, சக்ஷுஸ்மதி தேவி என்கிற இரண்டு பத்தினிகளோடு சேர்ந்து, இந்த சூரியக் கோட்டைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தோட்டத்தில் உபாசித்துக் கொண்டிருக்கிறார்.இதற்கு அடுத்து சந்திர மண்டலத்தாலான ஒரு கோட்டை இருக்கிறது. இந்த சந்திர மண்டலத்தாலான கோட்டைக்கு நடுவே யார் இருக்கிறார்களெனில், நட்சத்திர தேவதைகளோடு சேர்ந்து சந்திரன் அங்கு இருக்கிறார்.இதற்கு அடுத்து இருபத்தைந்தாவது கோட்டை சிருங்காரக் கோட்டை. இந்த சிருங்காரக் கோட்டை என்கிற கோட்டைக்குப் பக்கத்தில் சிருங்காரப் பாரிகை என்கிற தோட்டம் இருக்கிறது. இங்கு ரதி தேவியோடு சேர்ந்து மன்மதன் அம்பாளை உபாசித்துக் கொண்டிருக்கிறான். துவரையில் இருபத்தைந்து கோட்டைகள். அதற்கு நடுவே இருக்கக் கூடிய தோட்டங்கள். அப்படி தோட்டங்களில் இருக்கக் கூடிய தேவதைகள் இவை எல்லாவற்றையுமே லலிதா ஸ்தவ ரத்தினத்தில் துர்வாசர் எப்படிச் சொல்லியிருக்கிறாரோ அப்படி நாம் பார்த்துக் கொண்டே வந்தோம்இப்போது இந்த கோட்டைகளுடைய அமைப்பை பார்த்தோம். இதனுடைய உள் சூட்சுமங்களை இங்கு காணலாம் வாருங்கள். முதலில் வருவது உலோகக் கோட்டைகள். இரண்டாவது ரத்தினக் கோட்டைகள். மூன்றாவது கோட்டைகள் மனம், புத்தி, அகங்காரம், சூரியன், சந்திரன், மன்மதன் என்கிற இந்த ஆறு கோட்டைகள் ஆகும். இந்த மனம், புத்தி, அகங்காரம் என்பது நம்முடைய அந்தக்கரணங்கள். அடுத்து சூரிய மண்டலம், சந்திர மண்டலம், சிருங்காரம் என்கிற மன்மத ஸ்தானம். ஏன், மன்மதனுடைய ஸ்தானம் இருபத்தைந்தாவதாக இருக்கிறதெனில், மன்மதன் தலைசிறந்த அம்பாள் உபாசகன்.

இன்றைக்கு இருக்கக்கூடிய பஞ்சதசி மந்திரத்தை கொடுத்ததே மன்மதன்தான். அந்த இருபத்தைந்தாவது கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு அம்பாளை உபாசனை செய்கிறான்.இப்போது இந்த மூன்று classificationsம் எதைக் காண்பிக்கின்றது என்று பார்த்தால், முதலில் இருக்கக் கூடிய இந்த உலோகக் கோட்டைகள் எப்படி ஆரம்பிக்கிறதெனில், இரும்பில் ஆரம்பித்து தங்கம் வரைக்கும் போகின்றது. ஒவ்வொன்றாக வருகிறது.இதைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புரிகின்றது. இரும்பில் ஆரம்பித்து தங்கத்தில் சென்று முடிகின்றது. ரும்பிலிருந்து சென்று ஒவ்வொரு அடுத்தடுத்த கோட்டைகளை நாம் பார்த்தோமெனில், முதல் கோட்டையானது இரும்பு என்பது மிகமிக கடினத்தன்மையாக இருக்கக் கூடிய hardness அதிகமாக இருக்கக் கூடிய ஒரு metal. நாம் அடுத்தடுத்து இருக்கக்கூடிய உலோகமாகப் பார்த்தால், அடுத்து வெண்கலம். தாமிரம் வருகிறது. அடுத்து ஈயம். இதில் என்னவெனில், இந்தக் கடினத்தன்மை ஒவ்வொரு உலோகத்திலும் குறைந்து கொண்டே வருகிறது. கடினத் தன்மை குறையக் குறைய flexblity கூடிக் கொண்டே வருகிறது. அடுத்தடுத்து என்று பார்த்துக் கொண்டே வந்தால் தங்கத்தில் கடினத்தன்மை குறைந்து விடும். flexblity அதிகமாகும். மென்மை கூடுகின்றது.ஏதோவொரு விஷயத்தை நமக்கு காண்பிப்பதற்காக வேண்டியே இதை ஒரு orderல் வைத்திருக்கிறார்கள்.இதற்கு முன்னால் இருக்கக் கூடிய உலோகக் கோட்டையில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். கடினத்தன்மை குறையக் குறைய அந்த உலோகத்தினுடைய value கூடுகிறது. இப்போது இரும்பிலிருந்து தங்கம் வரையிலும் பார்த்தோமானால் அதன் மதிப்பு கூடுவதையும் கவனியுங்கள். தற்கடுத்து ரத்தினமயமான கோட்டைகள் பதினோரு இருக்கிறது. புஷ்பராகத்திலிருந்து தொடங்கி… நாநா ரத்தினங்கள் வரையிலும் பல்வேறு கோட்டைகள் அல்லது பிராகாரங்கள் என்றுகூட பார்க்கலாம்.
இந்த மூன்றும் நமக்கு எதைக் காட்டுகின்றது என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும்.

வெளியில் இருக்கக் கூடிய இந்த உலோகக் கோட்டைகள், கடினத் தன்மையில் ஆரம்பித்து கொஞ்சம் இலகி இலகி… இந்த எட்டு கோட்டைகள் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கின்றது எனில், ஒரு சாதகன் இதற்கு முன்னால் சிவசக்தி ஐக்கிய சொரூபத்தை தியானம் செய்கிறான். அதற்கு முன்னால் இருக்கிற ஸுமேரு மத்ய ஸ்ருங்கத்தை தியானம் செய்கிறான். அப்படி அவன் தியானம் செய்யும்போது அப்படிப்பட்ட ஸ்ரீநகரத்தை தியானம் செய்யும்போது என்னவொரு அந்தமுகமாக மாற்றம் ஏற்படுகின்றது என்பதையும் கூர்ந்து பார்ப்போம். ந்த முதலில் இருக்கக்கூடிய கோட்டைகள் அவனுடைய ஸ்தூல சரீரமாகவும், அதற்கடுத்து உள்ள ரத்தினங்களால் உள்ள கோட்டை அவனுடைய சூட்சும சரீரமாகவும், மூன்றாவது கோட்டையான மனம் முதல் சந்திரன் வரையிலான ஆறு கோட்டைகள் அவனது காரண சரீரமாகவும் தரிசனம் கிடைக்கின்றது.வெளியில் இருக்கக் கூடிய கடினமான இரும்பிலிருந்து வரும் கோட்டைகள் மெல்ல மெல்ல தேகத்தை ஸ்தூலமாக இருக்கிறது. ரத்தினங்கள் என்று வரும்போது அதனுடைய value அதிகமாகும். இது சூட்சுமத்தை குறிக்கின்றது.

மனோ மயம், அகங்கார மயம் என்பதெல்லாம் இன்னும் அதி சூட்சுமமாக இருப்பதெல்லாம் நம்முடைய காரண சரீரத்தை குறிக்கின்றது. ப்போது சாதகன் இந்தக் கோட்டைகளையெல்லாம் இப்படிப் பார்க்கும்போது, வெளியில் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்தால், நகரம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த சொரூபமாகவும் இருக்கிறது. அதே சரீரமும் அவனுடைய  நகரமாகவே இருக்கிறது.பிரபஞ்சத்தில் இது எப்படிப் பொருந்துகிறது என்பதையும் பார்ப்போம் வாருங்கள். ந்தப் பிரபஞ்சம் மொத்தமும் மூன்று விதமான பொருட்களால் ஆனது. மூன்று விதமான பொருட்களில் அடக்கிவிடலாம். என்னவெனில், திட பதார்த்தங்களால் ஆனது. இன்னொன்று திரவ பதார்த்தங்களால் ஆனது. இதற்கடுத்து வாயுவால் நிறைந்திருப்பது. Solid, liquid and gas states…முதலில் சொல்லப்பட்ட உலோகக் கோட்டைகள் திடப் பொருட்கள் என்கிற solid stateஐ குறிக்கின்றது. அதற்கடுத்து இருக்கக் கூடிய ரத்தின மயமான பதினோரு கோட்டைகள் அது இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய liquid stateஐ குறிக்கின்றது. ஏனெனில், ஒவ்வொரு ரத்தினங்களையும் பார்த்தால் நீரோடு சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். நீர் ஊடுருவிதான் ரத்தினங்கள் உருவாவதாக ஒரு விஷயம் உண்டு. உள்ளே நீரோட்டம் உண்டு என்பார்கள், ரத்தின பரீட்சை தெரிந்தவர்கள். பவழம் முத்து போன்றவை நீரிலேதான் முக்கியமாக கிடைக்கின்றன. அடுத்து இருக்கக்கூடிய மனோமயக் கோட்டை தொடங்கி மன்மதக்கோட்டை முடிய எல்லாமே இந்த பிரபஞ்சத்தினுடைய வாயுவின் அம்சங்களை நிலைகளை காண்பித்துக் கொடுக்கின்றது.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post அகிலம் காப்பாள் ஆதிநாயகி appeared first on Dinakaran.

Tags : Akilam Kappal Adinayaki ,Sriman Nagara Naika ,Srinagar ,Pearl Fort ,Emerald Fort ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள...