- திமுக
- திண்டுக்கல்
- ஐபி
- செந்தில்குமார்
- சட்டமன்ற உறுப்பினர்
- திண்டுக்கல் வடக்கு-தெற்கு ஒன்றியம்
- அகரம்
- தாடிக்கொம்பு மாவட்டம்
- பிக்காபட்டி
- தெற்கு யூனியன்
- வெள்ளிமலை
- துணை
- தின மலர்
திண்டுக்கல், செப். 7: திண்டுக்கல் வடக்கு- தெற்கு ஒன்றியம் மற்றும் அகரம், தாடிக்கொம்பு பேரூர் திமுக சார்பில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம் பாறைப்பட்டி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்க்ரேட் மேரி ஒன்றிய குழு தலைவர் ராஜா, துணை தலைவர் சோபியா ராணி பாஸ்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கலைராஜா, பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணை தலைவர் நாகப்பன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பேரூர் செயலாளர் ராமலிங்கசாமி முன்னிலை உரையாற்றினர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்து பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் பல்வேறு திட்டங்கள் நேரிடையாக கிராமங்களுக்கு சென்று அடைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் தினமும் பயணம் செய்கின்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு மாதம் கூட விடுபடாமல் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 1 கோடியே 70 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் மருந்துகளை அவர்களின் வீட்டுக்கே சென்று கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.8000 கோடியில் 20000 கிலோ மீட்டர் சாலைகள் புதிதாக போடப்பட்டு வருகின்றன. இப்படி எண்ணற்ற திட்டங்களை நமது முதல்வர் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவரது கரங்களை வலுப்படுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதற்காக ஒவ்வொரு நிர்வாகிகளும், கழக முன்னோடிகளும் அதிகமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பொன் முருகன், ஆதிதிராவிட நலக்குழு வீராச்சாமி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சுரேஷ், காளிதாஸ், கதிரேசன், பொன்ராம், ரகுமான், வள்ளி, குருசாமி, ராதாகிருஷ்ணன், சுப்புலட்சுமி, அலெக்ஸ், ஜெயராமன், செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.