×
Saravana Stores

முல்லை நகரில் 6வது நாளாக தெருக்களில் குடியேறும் போராட்டம்

மதுரை, நவ. 17: மதுரை, பீபீ குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் அதிக குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையில் இப்பகுதியில் தண்ணீர் புகுந்தது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையும் ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரியும், தங்கள் வசிப்பிடப் பகுதியை நீர்நிலைப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியாக வகைமாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும் முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறி=, அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். நேற்று இவர்களின் போராட்டம் 6வது நாளாக நீடித்தது. அவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டியபடி, போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஏராளமான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

The post முல்லை நகரில் 6வது நாளாக தெருக்களில் குடியேறும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mullai Nagar ,Madurai ,Bibi Kulam Mullai Nagar, Madurai ,Water Resources Department ,
× RELATED ஜல்லிக்கட்டு காளைகள் மேய்ச்சலால் தகராறு 2 பேர் மீது வழக்கு