- அமைச்சர்
- அன்வில் மகேஷ்
- சென்னை
- கல்வி அமைச்சர்
- அன்பில் மஹேஸ்
- மகா விஷ்ணு
- அசோக் நகர்
- நிலை
- பள்ளி
- அன்பில் மகேஷ்
சென்னை :அரசுப் பள்ளிக்கே வந்து ஆசிரியர்களை அவமானப்படுத்திய அந்த பேச்சாளரை சும்மா விடமாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி கருத்தரங்கில் ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் மகாவிஷ்ணு என்பவர் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையானது. மாற்றுத் திறனாளிகள் குறித்தும் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார். மறுபிறவி குறித்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் எழுந்து வந்து கண்டனம் தெரிவித்தார். முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத் திறனாளிகளாக, ஏழைகளாக பிறக்கிறார்கள் என மகாவிஷ்ணு பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சொற்பொழிவு நடத்தப்பட்ட அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக் கூடியது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பார்வையற்ற தமிழாசிரியர் சங்கரே உதாரணம்.அசோக் நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய சொற்பொழிவு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் .தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம்.
தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி. எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் என்பது இல்லை. புதிய கல்விக்கொள்கையை கூட நாங்கள் அதற்காக ஏற்கவில்லை.தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை விவகாரத்தில், சுற்றுச்சூழல் இணை செயலாளர் கொடுத்த சுற்றறிக்கை மூலமாக மாவட்ட ஆட்சியரும் அதன் அடிப்படையில் சி.இ.ஓ பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கின்றார். இது குறித்து தலைமைச் செயலரிடம் அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கச் சொல்லி இருக்கின்றேன். இது விநாயகர் சிலையை கரைக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டிய சுற்றறிக்கை, அதை ஏன் பள்ளிகளுக்கு கொடுத்தார்கள் என்பது குறித்து கேட்டுள்ளேன்.ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான CULTURE என்று தெரியவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் பாதத்தை மாணவர்கள் கழுவுவது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அரசுப் பள்ளிக்கே வந்து ஆசிரியர்களை அவமானப்படுத்திய அந்த பேச்சாளரை சும்மா விடமாட்டோம்: ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.