- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தேசிய ஆசிரியர் தினம்
- டாக்டர்
- சர்வாபள்ளி ராதகிருஷ்ணன்
- இந்தியக் குடியரசுத் தலைவர்
- திரபூபதி மர்மு
- விஜயன் பவன்
- தில்லி
புதுடெல்லி: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 82 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதை வழங்கினார். இதில் தமிழகத்தை சேர்ந்த நான்கு ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத், மதுரை டி.வி.எஸ் உயர்நிலை பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் காந்திமதி, சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஸ்மைலினி கிரிஜா உள்ளிட்ட நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டனர்.
The post தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு பேர் உள்பட 82 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசு தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.