×

முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகை எதிரொலி: திருப்புவனத்தில் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு

சிவகங்கை: முகூர்த்தநாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருப்புவனம் பகுதியில் வாழை இலையின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வாழை விவசாயம் முக்கியமானதாக உள்ளது. பல்வேறு ரக வாழைகள் பயிர்செய்தாலும் இலைக்காக மட்டும் ஒட்டு வாழையே அதிக அளவாக பயிரிட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் தொடங்கியதால் வாழை இலையின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு தொடர் முகுர்த்தம், விநாயகர் சதுர்த்தி காரணமாக 200 இலைகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.450 லிருந்து ரூ.1000 ஆக உள்ளது. நாள் ஒன்றிற்கு சுழற்சி முறையில் பக்க கன்றுகள் பெரிய வாழைகளில் 1000 இலைகள் கிடைக்கும் என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏக்கருக்கு 80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்த விவசாயிகள் இலை விலை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு வரும் 16ம்ம் தேதி வரை முகுர்த்த நாள் உள்ளதால் இலையின் விலை மேலும் உயரும் என்று தெரிவித்துள்ளனர்.

The post முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகை எதிரொலி: திருப்புவனத்தில் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mugurtha days ,Vinayagar Chaturthi festival ,Tirupuvanam ,Sivaganga ,Tiruppuvanam ,Mukurthanads ,Ganesha Chaturthi ,Tiruphuvanam ,Sivagangai district ,Mukurtha days ,Tiruppuvana ,
× RELATED சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா...