- கரூர் மாவட்ட தடகள சங்கம்
- -பொது வகை போட்டிகள்
- கரூர்
- இளையோர் மற்றும் பொதுப்பிரிவு தடகளப் போட்டிகள்
- டாக்டர் எம்ஏஎம் அரசு மேல்நிலைப்பள்ளி கவுண்டம்பாளையம் விளையாட்டு மைதானம்
- கரூர் மாவட்டம்…
- தின மலர்
கரூர், செப். 5: கரூர் மாவட்ட தடகள சங்கம் நடத்திய 27 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக டாக்டர் எம்ஏஎம் அரசு உயர்நிலை பள்ளி கவுண்டம்பாளையம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 800க்கும் மேற்பட்டோர் 95 தடகள போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற வீரர்கள் தகுதியின் அடிப்படையில் வரும் 20 மற்றும் 21ம் தேதி தேதிகளில் ஈரோட்டில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதில், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், சேரன் உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் அமுதா, மாவட்ட தடகள சங்க தலைவர் எம்சி கனகராஜ், துணைத் தலைவர் எஸ்பி குமார் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், துணை காவல் ஆய்வாளர் உதயகுமார் 2ம் நாள் போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் திம்மாச்சிபுரம் செல்வம் கரூர் மாவட்ட அமைச்சு கபடி கழக செயலாளர் சேதுராமன், சர்வதேச தடகள வீரர் வீரப்பன் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் லியோ சதீஷ், நாமக்கல் தடகள சங்க செயலாளர் வெங்கடாஜலபதி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தடகள சங்க செயலாளர் பெருமாள் பொருளாளர் மற்றும் இணைச் செயலாளர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post கரூரில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் இளையோர்-பொதுபிரிவு போட்டிகள்: 800 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.