×

வடமாநிலங்களில் கனமழை, வௌ்ளம்; குஜராத், மகாராஷ்டிராவில் 59 பேர் பலி

சத்ரபதி சம்பாஜிநகர்: குஜராத்தில் கனமழை விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். இதேபோல் மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் கனமழையால் 10 பேர் பலியாகி விட்டனர். வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுகுறித்து குஜராத் அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரிகள் கூறும்போது, இந்த காலகட்டங்களில் மின்னல், இடி, சுவர் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவம் இணைந்து வௌ்ளத்தில் சிக்கி தவித்த 35,000க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி உள்ளனர். ” என தெரிவித்தார். இதனிடையே மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக துலே, நந்தூர்பார், பர்பானி, ஹிங்கோலி, நாங்கெட் உள்ளிட்ட மராத்வாடா மண்டல பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை(1ம் தேதி) வரை கனமழை கொட்டி தீர்த்து. மரத்வாடா மண்டலத்துக்குள்பட்ட 63 கிராமங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் அணைகள் முழு கொள்ளவை தாண்டி உபரி நீர் வௌியேறி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “கனமழையால் 7 மாவட்டங்களில் உள்ள 29 லட்சம் ஹெக்டர் நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மரத்வாடா பகுதியில் கனமழைக்கு 10 பேர் பலியாகி விட்டனர் ” என்று தெரிவித்தனர்.

The post வடமாநிலங்களில் கனமழை, வௌ்ளம்; குஜராத், மகாராஷ்டிராவில் 59 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : northern states ,Gujarat, Maharashtra ,Chhatrapati ,Sambhajinagar ,Gujarat ,Marathwada, Maharashtra ,
× RELATED எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரம்;...