×

தஞ்சாவூர் கும்பகோணத்தில் சிறப்பு குபேர விநாயகர் அலங்காரம்

 

கும்பகோணம், செப். 4:கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள புகழ்பெற்ற காசிக்கு வீசம் அதிகம் காட்டிய பகவத் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் நடைபெற்று வரும் விழாவில் இரவு ரூ.5 இலட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் பகவத் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு குபேர விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு அலங்காரத்தில் ரூபாய் 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றிருந்தன. மேலும் மூலவர் பகவத் விநாயகர் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பகவத் விநாயகர் ஆலயத்தில் திரண்டனர்.

 

The post தஞ்சாவூர் கும்பகோணத்தில் சிறப்பு குபேர விநாயகர் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Thanjavur Kumbakonam ,Kumbakonam ,Kumbakonam Mathathuttheru ,Kashi ,Bhagwat Vinayagar Temple ,Vinayagar Chaturthi festival ,
× RELATED தஞ்சாவூர் கும்பகோணம் வட்டார...