×

சீனாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் மாணவர்கள் கூட்டத்தில் பேருந்து மோதியதில் 11 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமடைந்தனர். கிழக்கு சீனாவின் ஷன்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது மாணவர்களை ஏற்றி செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாடகை பேருந்து வந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மாணவர்களின் கூட்டத்தில் மோதியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 13 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் மீது பேருந்து மோதியது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்பது தெரியவில்லை. சீனாவில் அதிருப்தியாளர்கள் மழலையர் பள்ளிகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள்.

 

The post சீனாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Tai'an ,East China ,Shandong Province ,
× RELATED சீனாவில் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆண்களுக்கு 63, பெண்களுக்கு 58