×

சாத்தூர் பகுதியில் பாலங்கள் பராமரிப்பு பணி விறுவிறுப்பு

சாத்தூர்: சாத்தூர் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலங்கள் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால், மழை காலத்துக்கு முன்பாக சாலைகளில் உள்ள பாலங்களில் மழை வெள்ளநீர் தங்கு தடையின்றிச் செல்ல பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சாத்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாத்தூர் மன்னார்கோட்டை சாலை ராமலிங்காபுரம் பகுதியில் சீரமைப்புப் பணி தொடங்கியது. மாநில நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆனந்தகுமார், உதவிப் பொறியாளர் அபிநயா மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் பாலங்களின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்திருந்த முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றினர். பின்னர் பாலத்துக்கு அடியில் மழைநீர் தேங்கி நிற்காமல் செல்லும் வகையில் மண் பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் கருப்பு, வெள்ளை வண்ணங்கள் தீட்டப்பட்டன.

The post சாத்தூர் பகுதியில் பாலங்கள் பராமரிப்பு பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாத்தூரில் பயணிகள் அவதி: அடிக்கடி இருளில் மூழ்கும் ரயில் நிலையம்