- அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி
- திருவள்ளூர்
- பழஞ்சூர் கிராமம்
- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்
- செம்பரம்பாக்கம் ஊராட்சி
- அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி
- தின மலர்
திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் ரூ.500 கோடி மதிப்பில் 25 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்கள் இருந்தன. இந்த நிலம் மற்றும் கட்டிடங்களை வருவாய்த் துறையினர் நேற்று கையகப்படுத்தினர். இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட தனியார் பள்ளியில் ஏற்கனவே கல்வி நிறுவனம் செயல்பட்டு வந்ததால், அங்கு கையகப்படுத்தப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கல்வி நிலையம் நடத்தும் அளவிற்கு கட்டிடங்கள் உள்ளன.
இதுவரை செம்பரம்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று படித்து வருகின்றனர். எனவே செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு தனியாக மேல்நிலைப் பள்ளி, அரசு கல்லூரி, விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜிடம் செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் கிராம மக்களுடன் அதற்கான மனுவை வழங்கினார்.
The post தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.