- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர்.என்.ரவி
- செல்வாப்பேருந்தகை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தக்காய்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- RN
- ரவி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: தேசிய பாட திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடதிட்டத்தின் தரம் குறைவாக உள்ளதென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பேசும் போது குற்றம் சாட்டியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக செயல்படுவதை நாள்தோறும் ஒரு வேலையாகவே ஆளுநர் செய்து வருகிறார். தமிழக அரசை வஞ்சிக்கும் பா.ஜ. அரசுக்கு துணை போகிற ஆளுநர் தமிழக பாடத்திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது.
இந்நிலையில் மத்திய பாட திட்டத்திற்கு ஆதரவாகவும், மாநில பாட திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜக போக்கையே காட்டுகிறது. ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.வின் செய்தி தொடர்பாளரா என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகத்தின் பாடத் திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அதிகார மமதையையே காட்டுகிறது. இத்தகைய தமிழக விரோத பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தின் பாடத்திட்டத்தை தரம் குறைந்தது என்பதா?: ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.