×

மொபட் மீது கார் மோதி அக்கா, தம்பி பரிதாப பலி: போதை டிரைவரை கட்டி வைத்து அடிஉதை

தாரமங்கலம்: சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சேட்டு (55), அக்கா மல்லிகா (60), உறவினர் பானுமதி ஆகியோருடன் கோணகாபாடியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மொபட்டில் நேற்று சென்றார். கே.ஆர்.தோப்பூர் அருகே சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் சேட்டு மற்றும் அவ்வழியாக சென்ற கந்தசாமி ஆகியோரது டூ வீலர்களில் மோதியது. இதில், மொபட்டில் வந்த 3 பேரும், கந்தசாமியும் தூக்கி வீசப்பட்டனர். சேட்டு, மல்லிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பானுமதியும், கந்தசாமியும் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குடிபோதையில் கார் ஓட்டி வந்த சேலம் சித்தனூரை சேர்ந்த டிரைவர் ஜவகரை (49) பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். பெண்கள் மரக்கட்டையால் தாக்கினர். தகவலறிந்து தாரமங்கலம் போலீசார் வந்து டிரைவர் ஜவகரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

The post மொபட் மீது கார் மோதி அக்கா, தம்பி பரிதாப பலி: போதை டிரைவரை கட்டி வைத்து அடிஉதை appeared first on Dinakaran.

Tags : Dharamangalam ,Chettu ,Annadhanapatti, Salem ,Mallika ,Banumathi ,Kulatheiva temple ,Konagapadi ,KR Dhoppur ,
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி