×
Saravana Stores

பாளையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

 

நெல்லை, செப். 2: தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் பாளையங்கோட்டையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப்டம்பர் 5ம் தேதி முதல் 8ம்தேதி தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதில் தங்கத்தின் விலையை கணக்கிடும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.

மிகப்ெபரிய நகை நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரியலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார்அட்டை, பயிற்சி கட்டணம் ரூ.7,700 ஆகியவற்றுடன் செப்டம்பர் 5ம்தேதி வியாழக்கிழமை பாளையங்கோட்ைட தலைமை தபால் ஆபீஸ் தெருவில் உள்ள ரேடியன்ட் ஐஏஎஸ் அகாடமிக்கு நேரில் வரவும். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள நெல்லை டவுனில் உள்ள ரோகிணி கோல்ட் அகடாமிக்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாளையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellie ,Palayangottai ,National Development Agency ,Dinakaran ,
× RELATED நெல்லை நீட் பயிற்சி மையம் மீது வழக்கு