×

ரூ.38 கோடியில் வீடு வாங்கிய அலியா பட்: மேலும் 2 வீடு வாங்கி சகோதரிக்கு பரிசளிப்பு

மும்பை: மும்பையின் பாலி ஹில் பகுதியில் ரூ.38 கோடியில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகை அலியா பட், மேலும் 2 வீடுகளை வாங்கி அவரது சகோதரிக்கு பரிசாக அளித்தார். பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டின் சினிமா தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட், மும்பையின் பாந்த்ரா வெஸ்டின் பாலி ஹில் பகுதியில் ரூ.37.80 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2,497 சதுர அடியில் வாங்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, ஏரியல் வியூ கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி லிமிடெட்டில் அமைந்துள்ளது. மேற்கண்ட சொத்தானது, கோல்ட் ஸ்ட்ரீட் மெர்கன்டைல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான பத்திரப் பதிவு ஒப்பந்தம் கடந்த 10ம் தேதி நடந்ததாகவும், அதற்கான முத்திரைத் தொகையாக ரூ.2.26 கோடி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அலியா பட் தனது சகோதரி ஷாஹீன் பட்டிற்கு ரூ.30.75 கோடி மதிப்பிலான இரண்டு வீடுகளை வாங்கி அதனை பரிசாக அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரூ.38 கோடியில் வீடு வாங்கிய அலியா பட்: மேலும் 2 வீடு வாங்கி சகோதரிக்கு பரிசளிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Alia Bhatt ,Mumbai ,Bally Hill ,Bollywood ,Eternal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!