×

அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: மண்டபம் மீனவர்கள் வலியுறுத்தல்

மண்டபம்: மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் அமைந்துள்ள அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தை புதுப்பிப்பதற்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபத்தில் வடக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதியில் 540க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கு அரசு மானிய விலையில் டீசல் எரிவாயு வழங்குகிறது. இந்நிலையில் மண்டபத்தில் வடக்கு மற்றும் தென் கடலோரப் பகுதியில் அரசு மானியம் டீசல் வழங்கும் நிலையம் உள்ளது.

இதில் வடக்கு துறைமுகப் பகுதியில் இந்திய கடலோர காவல் படை முகாம் நிலையத்திற்கு பின்புறம் அருகே உள்ள மானிய டீசல் வழங்கும் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. மீனவர்கள் மானிய டீசலை வாகனங்களில் வந்து கேன்களில் பிடிக்க வரும்போது உயரம் இல்லாத குறுகிய மேற்கூரை இருப்பதால் அவதிப்படுகின்றனர். அதுபோல வெயில், மழைக்காலங்களில் மீனவர்கள் மேற்கூரை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

அதுபோல மானிய டீசல் பிடிப்பதற்கும் போதிய அலுவலர்கள் இல்லாததால், மீனவர்களே நேரடியாக டீசல்களை கேன்களில் பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசுக்கு இழப்பீடும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மானிய டீசல் வழங்கும் இயந்திரம் கடல் காற்றில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைத்து வருகிறது. இதனால் டீசல் வழங்கு விதத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்புகள் உள்ளது.

ஆதலால் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மானிய டீசல் வழங்கும் இயந்திரத்தை புதுப்பிக்க வேண்டும். உயர்ந்த அளவில் நிழற்குடை அமைக்க வேண்டும் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: மண்டபம் மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Mandapam North Port ,Dinakaran ,
× RELATED விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் புதுமடம் மக்கள் கோரிக்கை