- அரசு பள்ளி மாணவி
- ஜெயங்கொண்டம்
- உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு
- சட்டமன்ற நாயக்கர் கலைஞர்
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஆக. 31: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் வழிபாட்டு கூட்டத்தில் சென்னையில் ரோசரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா “சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் “கலைஞர் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்றதலைப்பில் பேச்சு ப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறப்பு பரிசாக சான்றிதழ், புத்தகம் பரிசுத்தொகை ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் பரிசு வழங்கினார்.
வெற்றி பெற்று வந்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளி உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமையில் மாணவியை சிறப்பு செய்து அனைத்து மாணவிகள் முன்னிலையில் பாராட்டப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி, வளர்மதி, வனிதா,மஞ்சுளா, அமுதா, பூசுந்தரி, தமிழரசி, அருட்செல்வி, பாவைசங்கர்,காமராஜ், லூர்து மேரி தமிழாசிரியர் இராமலிங்கம் ,உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்துகொண்டு மாணவியை பாராட்டினர்.
The post “சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கம் பேச்சுப் போட்டியில் பரிசு: அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.