×

தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் ரயில்வே சுரங்க பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்: தேங்கி நின்ற தண்ணீரில் நீந்தி நூதன எதிர்ப்பு

கும்மிடிப்பூண்டி, ஆக, 31: சென்னை – சூளூர்பேட்டை ரயில் மார்கத்தில் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் ஆந்திர மாநிலம் பெரியவேடு கிராமத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில்வே சுரங்க பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனை கண்டித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக சுரங்க பால பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திட வலியுறுத்தி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுரங்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் நீந்தியபடியும் சிலர் தங்களது நூதன எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், ஆந்திர மாநில போலீசார், ஆந்திர மாநில வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் திங்கட்கிழமை சுரங்க பால பணிகளை தொடங்குவதாகவும், 4 மாதங்களில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் ரயில்வே சுரங்க பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்: தேங்கி நின்ற தண்ணீரில் நீந்தி நூதன எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu-Andhra border ,Kummidipoondi ,Periyavedu village ,Andhra ,Tamil Nadu-Andhra border ,Arambakkam railway station ,Chennai-Sulurpet ,Nutana ,
× RELATED கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு...