×

பெண் காவலரை கேலி செய்த கல்லூரி மாணவர் மன்னிப்பு கோரினார்: ேபாலீசார் எச்சரித்து அனுப்பினர்

அம்பத்தூர், செப். 12: அமைந்தகரை பகுதியில் ஒரே பைக்கில் 3 பேர் சென்றதால் பெண் காவலர் மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது, அவரை கேலி, கிண்டல் செய்துள்ளார். இறுதியில் அந்த மாணவர் மன்னிப்பு கேட்டதால் கடிதம் எழுதி வாங்்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை அமைந்தகரை பகுதியில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேரை அந்த காவலர் மறித்தபோது பைக்கை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் பெண் காவலர் விரட்டிச்சென்று அந்த பைக்கை பறிமுதல் செய்து வாலிபர்களை சுற்றிவளைத்துள்ளார். அந்த சமயத்தில் இரண்டு பேர் தப்பி சென்றுவிட்டனர்.

இதில் சிக்கிய ஒருவரிடம் விசாரித்தபோது, கடும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், ‘‘பெண் காவலரிடம் எதற்காக எனது பைக்கை மறித்தீர்கள். திருடனை பிடிப்பது போல் என்னை பிடித்து விசாரிக்கின்றீர்கள்’ என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென அந்த பெண் காவலரை கிண்டல் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த காவலர், இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வந்து பெண் காவலரை தரக்குறைவாக பேசிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதன்பிறகு போலீசார் முன்னிலையில் அந்த வாலிபர், பெண் காவலரிடம் மன்னிப்பு கேட்டார். இதன்பின்னர் அந்த வாலிபரிடம் கடிதம் எழுதி வாங்கிகொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post பெண் காவலரை கேலி செய்த கல்லூரி மாணவர் மன்னிப்பு கோரினார்: ேபாலீசார் எச்சரித்து அனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Nuktakarai ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை;...