- பஞ்சப்பாடி
- சென்னை வேளாண்மை மற்றும் வேளாண் வணிக ஆணையர் அலுவலகம்
- விவசாய விற்பனை மற்றும் வேளாண் வணிகத் திணைக்களம்
- மோகன்
- சேலம் விற்பனை குழு
- சேலம் ஒழுங்குமுறை விற்பனை பார்
- சலப்பாடி
- தின மலர்
வாழப்பாடி, ஆக.31: சென்னை வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் (ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) மோகன், சேலம் விற்பனை குழு, சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கிடங்குகளில் இருப்பு வைக்கபட்டுள்ள மஞ்சள் மற்றும் பாசிபயிறு ஆகிய விளைபொருட்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இ-நாம் மூலம் நடைபெற்ற மறைமுக ஏலத்தை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சேலம் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
The post இ-நாம் சந்தை திட்டத்தை வேளாண் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.