×
Saravana Stores

அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு, ஆக. 31: செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, கிராமப்புற இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டதின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. மேற்படி, இத்திட்டதில் செக்ரிட்டி சூப்பர்வைர், ரெஸ்டாரண்ட் கேப்டன், வெட்டிங் டெக்னீசியன் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சியும் வழங்கப்படும்.

பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இடங்களில் அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தங்கள் ஊராட்சிகளில் உள்ள சமுதாய வல்லுநர்கள் (வேலைவாய்ப்பு) மூலமாக தங்கள் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அல்லது வட்டாரத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர், அச்சிறுப்பாக்கம் 63743 83996, சித்தாமூர்-73051 35173, லத்தூர்- 97518 12387, காட்டாங்கொளத்தூர்- 63792 89417, மதுராந்தகம்-99409 77470, புனித தோமையர்மலை- 90927 84939, திருக்கழுக்குன்றம்-80981 07546, திருப்போரூர்-96597 44962 ஆகியோர்களை அணுகி விவரங்களை பெற்று பயிற்சிகளில் சேர்ந்து பயன் அடையலாம். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த, இருபால் இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான, தொழில் பிரிவை தேர்வு செய்து பயிற்சி பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Arunraj ,Chengalpattu District ,Deendayal ,
× RELATED செங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்