×

50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கோயில் நிலத்தை மீட்டு விவசாய நிலமாக மாற்றிய ஊராட்சி: குவியும் பாராட்டுக்கள்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டு விவசாய நிலமாக உருவாக்கிய ஊராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள தோப்புப்பட்டி அருகில் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் தரிசு நிலத்தை கடந்த 50 ஆண்டுகளாக தனி நபர்கள் அக்கிரமித்திருந்தனர். இந்த நிலத்தில் ஊராட்சி சார்பில் மீட்டெடுத்து விவசாய நிலமாக மாற்றியுள்ளனர். அதில் காய்கறி, கீரை வகைகள், தென்னை, வாழை, எலுமிச்சை நடவு செய்யப்பட்டு ஊராட்சி பள்ளியில் உள்ள 6  அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவுக்கு அவை வழங்கப்படுகிறது. ஓய்வில் இருக்கும் நாட்களில் கிராமத்து மக்கள் பணம் வாங்காமல் இந்த விவசாய நிலத்தில் பணி செய்கின்றனர். இதனை அறிந்த கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், நேரில் சென்று அனைவரையும் பாராட்டி உணவு வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்திலேயே முன்னோடியாக இந்த ஊராட்சியில் மியாவாகி அடர்வன காடுகளை உருவாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்துள்ளார். …

The post 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கோயில் நிலத்தை மீட்டு விவசாய நிலமாக மாற்றிய ஊராட்சி: குவியும் பாராட்டுக்கள் appeared first on Dinakaran.

Tags : Dinditukal ,Vedasantur ,
× RELATED ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்