இஸ்லாமாபாத்: அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு (சிஹெச்ஜி) தற்போது பாகிஸ்தான் தலைமை வகிக்கிறது. இக்குழுவின் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் அக்டோபரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. சீனா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்குமாறு முறைப்படி அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்துள்ளார். “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை சில நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன.
எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீா் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகள் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு பாகிஸ்தான் இந்த அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இஸ்லாமாபாத் செல்கிறாரா பிரதமர் மோடி?.. எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்த பாகிஸ்தான் appeared first on Dinakaran.