பெரம்பலூர், ஆக. 30: விநாயகர் சிலைகளை வைக்கவும், ஒலிபெருக்கி சாதனங்கள் பயன் படுத்தவும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு கோஷம் போடக்கூடாது என்று பெரம்பலூரில் சிலை அமைப்பாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாடெங்கும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா வருகிற செப் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சிலை அமைப்பு குழுவினர் முன்னிலையில் காவல் துறை சார்பாக ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் நேற்று (29 ஆம்தேதி) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். சப் இன்ஸ் பெக்டர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்ட பாதை வழியாக பொது மக்களுக்கோ போக்கு வரத்துக்கோ எந்த விதமான இடையூறும் ஏற்பட வண்ணம் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திடவும், விநாயகர் சிலையை உள்ளூரில் உள்ள குளம் மற்றும் திருச்சி காவேரி ஆற்றில் கரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது விழாக்குழுவினர் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் பற்றி பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தெரிவித்ததா வது :
விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்யப் ,படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் இரசாயன வண்ணம் பூச்சு இல்லாத, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரிஸ் என்ற இரசாயன கலவையில் செய்யப்படும் விநாயகர் சிலை, நீர் நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்ய உத்தரவிட்டதால், இது போன்ற சிலைகளை வழி பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் சிலை வைப்பதற்கு சம்பந் தப்பட்ட உள்ளாட்சி அமைப் புகளிடம் இருந்து அனுமதியும் மற்றும் தனியார் இடங்களில் சிலை வைப்பதற்கும் சம் பந்தப்பட்ட உரிமையாளரிட மிருந்து அனுமதியும் கட்டாயம் பெறௌறிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் சிலை வைக்க அனுமதி மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் போடப்படும் தற்காலிக கூரையானது எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் அமைத்திட தீயணைப்புத் துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும்.
காவல்துறையின் வழி காட்டுதலின்படி, முடிந்த வரையில் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லாத சாலைகளின் வழியே விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று, கரைக்க வேண்டும்.சிலை கொண்டு செல்லப்படும் வாகனத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ் அனுமதிக் கப்பட்ட அளவிலான நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் வழி மற்றும் கரைக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகளின் உயரம், சிலைகள் உயரம், மற்றும் செல்லும் பாதை யிலுள்ள மின்கம்பிகளை தொடாமல் 5 அடிக்குள் அமைக்கப்பட வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலத் தில் பங்கேற்கும் சிலைகள் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப் படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு கோஷம் போடக்கூடாது.ஊர்வலத்தை ஒரே இடத்தில் நிறுத்தி கோஷம் போடக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலம் போக்கு வரத்தை பாதிக்கும் வகை யில் இருக்கக் கூடாது. சிலை செல்லும் ஊர்வல பாதை தொடர்பான வரை படத்தை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது அரசு சொத்துக்களுக்கோ பொது மக்களின் சொத்துக்க ளுக்கோ சேதம் விளைவித் தால் ஊர்வலத்தின் அமைப்பாளர்களே பொறுப் பாவார்கள் எனஅறிவுறுத்தி பேசினார்.
இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கூறிய நிபந்தனைகளை ஏற்று, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட விநாயகர் சிலை அமைப்பாளர்கள் தெரிவித் தனர். மேலும் பெரம்பலூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் கிராம பகுதி களில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வ லத்தின்போது எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவது எனவும்,காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடு களை மேற்கொள்வது என வும் முடிவு செய்யப்பட்டது.
The post விநாயகர் சிலை வைக்க முன் அனுமதி அவசியம்: பிற மதத்தினரை குறிப்பிட்டு கோஷம் போடக்கூடாது appeared first on Dinakaran.