கரூர், ஆக. 30: கரூர்- திருச்சி பைபாஸ் சாலையோரம் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் புகைமூட்டத்தி்ல் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோரம் குப்பையை எரிப்பதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர்- திருச்சி பைபாஸ் சாலை, மதுரை பைபாஸ் சாலை, சேலம் பைபாஸ் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பிற சாலைகள் அனைத்திலும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலைகளில் அவ்வப்போது சாலையோரம் தேக்கி வைக்கபபடும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்படும நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, கரூர் -திருச்சி பைபாஸ் சாலை உப்பிடமங்கலம் பிரிவு அருகே செல்லும் சாலையோரம் இநத பகுதியில் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக வெளியேறிய புகையால் வாகன ஓட்டிகள் எளிதாக சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதுபோன்ற நிகழ்வுகள் இந்த பகுதிச் சாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்ற நிகழவுகளை பார்வையிட்டு இதனை முற்றிலும் தடுத்து நிறுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post 6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி கரூர்-திருச்சி பைபாஸ் சாலையோரம் குப்பையை தீவைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் புகையால் அவதி appeared first on Dinakaran.