திருப்பூர்: ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமுர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் குடலிறக்கம்இ கர்ப்பப்பை வயிற்றுக்கோளாறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் டாக்டர் ஹர்ஷா நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள பதிவுக்கட்டணம் இல்லை.
பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர், உணவியல் நிபுணர்களின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும், 1500 ரூபாய் மதிப்புள்ள வயிற்றுக்கான ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் 500 ரூபாய் சலுகைக்கட்டணத்தில் எடுக்கப்படுகிறது. குடலிறக்கம், ஹெர்னியா, பைல்ஸ், பௌத்திரம் அல்சர் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகள், பித்தப்பைக் கற்கள் மார்பக கட்டிகள் விரை வீக்கம், ஆசனவாய் வெடிப்பு, கல்லீரல் கணையம் பிரச்சனைகள் வயிற்றுப்புண், வெரிகோஸ் வெய்ன்,
நீண்ட நாள் ஆறாத புண்கள், சர்க்கரை நோய் கால் புண்கள் எண்டோஸ்கோபி கொலனோஸ்கோபி தேவைப்படுபவர்கள் ஜீரணமண்டல புற்றுநோய்கள், மலத்தில் இரத்தப்போக்கு, குழந்தைகளுக்கான குடலிறக்கம், ஓட்டுக்குடல் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், இந்த முகாமில் பரிந்துரை செய்யப்படும் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகளுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சலுகைக்கட்டணம் வழங்கப்படும். கலந்து கொள்ள 98422 09999 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரேவதி மெடிக்கல் சென்டரில் குடல் நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.