×
Saravana Stores

அரசை புகழ்ந்தால் ரூ.8 லட்சம் விமர்சனம் செய்தால் கைது? உ.பி அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு

லக்னோ: உபி புதிய டிஜிட்டல் கொள்கை அரசை புகழும் நபர்களுக்கு ரூ.8 லட்சமும், விமர்சனம் செய்தால் சட்ட நடவடிக்கையும் எடுக்க வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. உபி பா.ஜ அரசு புதிய டிஜிட்டல் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் யோகி அரசின் திட்டங்களை அதிக அளவில் விளம்பரப்படுத்தினால் மாதம் ரூ.8 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யோகி அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் அரசைப் பொய்யாகப் புகழ்வோருக்கு மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் வழங்கவும், சமூக வலைதளங்களில் பொதுப் பிரச்னைகளை எழுப்புபவர்களுக்கு சிறை, வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கவும் யோகி அரசு இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளதாக சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

The post அரசை புகழ்ந்தால் ரூ.8 லட்சம் விமர்சனம் செய்தால் கைது? உ.பி அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : UP government ,UP ,UP BJP government ,Chief Minister ,Yogi ,Dinakaran ,
× RELATED பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு...