×

வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு!!

சென்னை : வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் வகைகள் வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒரு விவசாய நடவடிக்கையாக காளான், பால் காளான், சிப்பி காளான், வெள்ளை பட்டன் போன்ற உண்ணக்கூடிய காளான்களை வளர்ப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது. குறைந்த முதலீட்டில், அதிக உழைப்பை ஈடுபடுத்தி செய்யக் கூடிய தொழில் உண்டு அந்த தொழில் தான் சிப்பி மற்றும் காளான் வளர்ப்பு தொழில் ஆகும்.

நிறைய தொழில்கள் குறைந்த முதலீட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாகத் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவைகளைக் கூறுலாம். சுமார் 20,000 காளான் வகைகள் உள்ளன, இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த, உண்ணக்கூடிய காளாள் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்துள்ளது.

The post வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...