×
Saravana Stores

பெருமாள், குருவாயூரப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், ஆக.27: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணன், குருவாயூரப்பன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோயிலில் பாண்டுரங்கநாதர், ருக்மணி தாயாரின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மிலிடெரி குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து குழந்தை கிருஷ்ணன் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதே போல், சேலம் கோட்டை பெருமாள், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி, செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி, பட்டைகோயில் வரதராஜபெருமாள், சிங்கமெத்தை செளந்திரராஜ பெருமாள், உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள், நாமமலை கோவிந்தராஜ பெருமாள், சின்னதிருப்பதி வரதராஜ பெருமாள் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன், குருவாயூரப்பன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

The post பெருமாள், குருவாயூரப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Perumal ,Guruvayuraapan ,Salem ,Krishna Jayanthiyota ,Krishna ,Guruvayurappan ,Krishna Jayanti festival ,Thirukkalyana ,Banduranganathar ,Rukmani ,Temple of Salem ,Banduranganathar Temple ,Guruvayuraapan Temples ,
× RELATED அழகு சௌந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை