- கரூர் உப்பிடமங்கலம்
- கரூர்
- கரூர் உப்பிடமங்கலம் சாலை
- வெங்ககல்பட்டி
- கரூர் மாநகராட்சி
- Uppidamangalam
- தின மலர்
கரூர், ஆக. 27: கரூர் உப்பிடமங்கலம் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களின் வழியாக உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில் கருர் திண்டுக்கல் ரயில்வே பாதை செல்வதால் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் உள்ளது.
இந்த குகை வழிப்பாதையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அவ்வப்போது சில பேரூந்துகளும் இந்த குகை வழிப்பாதையின் வழியாக செல்கிறது. இரவு நேரங்களில் இந்த குகை வழிப்பாதையை கடந்து செல்ல பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, அனைவரின் நலன் கருதி இந்த குகை வழிப்பாதை இருபுறமும் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அளவு மின் விளக்கு வசதி அமைத்து தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கரூர் உப்பிடமங்கலம் குகைவழிப்பாதை கூடுதல் மின் விளக்கு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.