×
Saravana Stores

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 9 வயது சிறுமி உலக சாதனை

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவரும் சோழவரம் ஊராட்சி பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கருணாகரன் – மகேஸ்வரி தம்பதியினரின் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயதான சிறுமி மௌசிகா  பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பக் கலைகளான நெடுக்கம்பு, நடுகம்பு, இரட்டைக்கம்பு, வாள்வீச்சு, ரிப்பன் பால், பஞ்சாப் பால், தீப்பந்தம், சுருள்வால், தராசு, வேல் கம்பு உள்ளிட்ட பத்து வகையான சிலம்பக் கலைகளை பத்தே நிமிடத்தில் சுற்றி சாதனை புரிந்தார்.

இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டு, அமெரிக்கன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டு, யூரோப்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டு உள்ளிட்ட உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி மௌசிகாக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் தேசிய தலைவர் அந்தோணி, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.பிரபாகரன், மாணவியின் பயிற்சியாளர் சிலம்ப ஆசான் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழ், கேடயம், பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

The post பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 9 வயது சிறுமி உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Mausika ,M. V. Karunakaran-Maheswari ,Padiyanallur ,Sengunram ,Cholavaram ,Panchayat ,Cholavaram South Union ,Dinakaran ,
× RELATED பாடியநல்லூர் ஊராட்சியில் சிமென்ட்...