×

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் லாபுஷேன் நம்பர் 1

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வரும் லாபுஷேன் 912 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தினார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் (897) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்களில் ரோகித் ஷர்மா (797) 5வது இடத்திலும், கேப்டன் விராத் கோஹ்லி (756) 7வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (904) முதலிடத்திலும், இந்தியாவின் ஆர்.அஷ்வின் (883) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (382), இந்தியாவுன் ஆர்.அஷ்வின் (360), ரவீந்திர ஜடேஜா (346) முதல் 3 இடங்களில் உள்ளனர்.பேட்டிங் டாப் 10ரேங்க்    வீரர்    புள்ளி1    மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.)    9122    ஜோ ரூட் (இங்கிலாந்து)    8973    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    8844    கேன் வில்லியம்சன் (நியூசி.)    8795    ரோகித் ஷர்மா (இந்தியா)    7976    டேவிட் வார்னர் (ஆஸி.)    7757    விராத் கோஹ்லி (இந்தியா)    7568    திமத் கருணரத்னே (இலங்கை)    7549    பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)    75010    டிராவிஸ் ஹெட் (ஆஸி.)    728…

The post ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் லாபுஷேன் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : ICC ,Labushen ,Dubai ,Marnus Labushane ,Ashes ,Dinakaran ,
× RELATED இதுவரை இல்லாத அளவாக உலக சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு