×

ஏழுமலையான் தரிசனம் ரூ.300 டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்  ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள்  நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள், ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என தினமும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. திருப்பதிக்கு நேரடியாக  வரும் பக்தர்களுக்கு வருகிற 31ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினமும் 5 ஆயிரம் வழங்கப்படும். எனவே, பக்தர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது….

The post ஏழுமலையான் தரிசனம் ரூ.300 டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Tirupati Etemalayan Temple ,Dinakaran ,
× RELATED கீழம்பி திருமலை கல்லூரி மாணவிகளுக்கு...