- திருதுரைபுண்டி
- தீபம் மோகன்
- திருவரூரபுண்டி மருத்துவமனை தெரு
- திருவாரூர் மாவட்டம்
- ஸ்வீட் ஸ்டால்
- அருள் பிரகாஷ்
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). இவர் தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் உள்ள மோகனுக்கு சொந்தமான இடத்தில் திருத்துறைப்பூண்டி பழைய காவல் நிலையம் இயங்கியது. தற்போது காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் மோகன் இடம் அருகே சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத் பட்டறை நடத்தி வந்தார். இவர் 2 மாதத்துக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த பட்டறையை ஆறுமுகம் மகன் ராம்(20) நடத்தி வருகிறார். ராமுக்கும், மோகனுக்கும் இடையே இடத்தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக ராமுக்கும், அருள் பிரகாசுக்கும் நேற்று மதியம் மீண்டும் இடத்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் ராம், அவரது பெரியப்பா முருகேசன் மகன் விக்னேஸ்வரன்(28) மற்றும் சிலர் சேர்ந்து அருள் பிரகாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அருள் பிரகாஷ் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராம், விக்னேஸ்வரனை இன்று காலை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
The post மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.