×

விவசாயம் செழிக்க வேண்டி சக்தி பீடம் சார்பில் நாகலாபுரத்தில் கஞ்சிக்கலய ஊர்வலம்

தூத்துக்குடி,ஆக 26: விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் சக்தி பீடம் சார்பில் நடந்த கஞ்சிக்கலய ஊர்வலத்தில் செவ்வாடை பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.

இதையொட்டி குருபூஜை, விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடந்தது. வேள்வியை திருவிக நகர் சக்திபீட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி துவக்கிவைத்தார். இதையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பருவமழை தவறாது பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.

இதில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சிக்கலயம், தீச்சட்டி எடுத்து பங்கேற்றனர். ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா துவக்கிவைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்ததும் கஞ்சி வார்த்து அம்மனுக்கு படைத்த பிறகு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதை மன்றத்தலைவர் விஜயலட்சுமி துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி பத்மா, முத்துலட்சுமி, துணைத்தலைவர் மாரியம்மாள், மன்ற பொறுப்பாளர்கள் ராஜதுரை, சுப்புலட்சுமி, கற்பகம், சோலையம்மாள், சக்திவேலம்மாள் உள்ளிட்ட செவ்வாடை பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post விவசாயம் செழிக்க வேண்டி சக்தி பீடம் சார்பில் நாகலாபுரத்தில் கஞ்சிக்கலய ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Kanjikalaya procession ,Nagalapuram ,Shakti Peedham ,Thoothukudi ,Chevvadai ,Kanjikalaya ,Sakthi Peedam ,Vlathikulam ,Thoothukudi District ,Melmaruvathur Adiparasakthi Temple ,
× RELATED சீனி அவரைக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி