×

அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 

திருத்துறைப்பூண்டி, செப்.14: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டது. மாநில பள்ளி கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மன்னார்குடி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார்.

கருத்தாளராக கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியன், அரக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சியான கணிப்பொறியினை தொடங்குதல், இணையதளத்தை பயன்படுத்துதல், மின்னஞ்சல் அனுப்புதல், தட்டச்சு, மென்பொருள்களை கையாளுதல், விளம்பரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சியளித்தனர்.

The post அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Government Men's Secondary School ,State School Educational Research Institute ,Mannarkudi District Educational Research Institute ,Thirutharpundi Government Men's Secondary School ,
× RELATED பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு