பந்தலூர்,ஆக.24: பந்தலூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள்,வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு காரணமாக பொதுமக்கள்,வியாபாரிள், அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை,காற்று ஏற்படும் போது வனப்பகுதி மட்டும் பிறபகுதிகளில் மின்கம்பத்தில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து பாதிப்புகள் ஏற்படும்போது மின் வெட்டு ஏற்படுவது வழக்கம்.
ஆனால் காற்று, மழைப்பொழிவு எதுவும் இல்லாத நிலையில் மின்வாரியத்தினர் பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் அடிக்கடி மின் துண்டிப்பு செய்வது தொடர்கதையாக உள்ளது. அறிவிக்கப்படாத மின் வெட்டால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பயன்படுத்துவது, குடிநீர் விநியோகம் போன்றவையும் பாதிக்கப்படுகின்றது.
மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் இ சேவை மையத்திற்கு பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுவதை தவிர்த்து சீரான மின் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்,வியாபாரிகள் அவதி appeared first on Dinakaran.