- கும்மிடிபூண்டி பஜார்
- டி.ஜே கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- Kummidipoondi
- கும்மிதிபூண்டி பஜார்
- ஆத்துப்பாக்கம்
- நெமலூர்
- மாதர்பாக்கம்
- ஆரம்பாக்கம்
- புதுவயல்
- தெஹராழி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் பகுதியில் ரூ.98 லட்சத்தில் பொது நூலக கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி பஜாரில் 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகத்தின் கட்டிடத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளான ஆத்துப்பாக்கம், நேமலூர், மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், புதுவாயல், தேர்வழி, பட்டுப்புள்ளி, ஐய்யர் கண்டிகை, பெத்திக்குப்பம், பெரிய ஒபுளாபுரம், குருவாட்டு சேரி, அயநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் புத்தக வாசிப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தினந்தோறும் காலை மாலை நூலகத்திற்கு என வந்து படிப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஒரு 10 ஆண்டுகளாக மேற்கண்ட நூலகம் பழுதடைந்தும் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் செயல்படவில்லை. இதற்கு சில அமைப்புகள் மற்றும் திமுகவினர், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவுக்கு நூலக கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய கட்டிடம் அமைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, சுமார் ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அதனை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான புதிய கட்டிட பூமி பூஜை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, புதிய நூலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சகிலா அறிவழகன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் தீபாமுனுசாமி வரவேற்றார். இதைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொது நூலக கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கீழ் தளம், மேல் தளம் என இரு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் படிக்கும் வரை, கணினி அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
நிகழ்விற்கு பேரூராட்சி, வார்டு உறுப்பினர்கள் காளிதாஸ், கருணாகரன், விமலாஅர்ஜுனன், நஸ்ரத்இஸ்மாயில், வெங்கப்பன், ராஜேஸ்வரி, கரீம், குணபூபதி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், பேரூர் செயலாளர் அரிவழகன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், வேலு, டி.சி.ஆர் மகேந்திரன், மஸ்தான், கே.என்.பாஸ்கர், டி.கே.மாரிமுத்து, வார்டு செயலாளர் டி.கே.ராஜா, காங்கிரஸ் நகர தலைவர் பிரேம், நூலகர் தேவி, சுரேஷ்பாபு, கன்னிமாரா நூலகர் உமாராணி, ஜோதிபாபு, மோகனா, திருவள்ளூர் மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பேனிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ரூ.98 லட்சத்தில் பொது நூலக கட்டிடம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.