×
Saravana Stores

அபுதாபிக்கு தப்பி செல்ல முயற்சி இணையதள மோசடியில் தேடப்பட்ட கேரள இளைஞர் சென்னையில் கைது

சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்தவர் ஹிபத்துல்லா (24). இவர் மீது கேரள மாநில போலீசில், இணையதளம் மோசடி வழக்கு பதிவாகி இருந்தது. இதையறிந்த அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாகபோலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஹிபத்துல்லாவை‌ தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதில் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியான ஹிபத்துல்லா, சென்னையில் இருந்து அபுதாபிக்கு தப்பிச் செல்வதற்காக வந்திருந்தார்.

குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, காசர்கோடு மாவட்ட போலீசாரால், இணையதள மோசடி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஹிபத்துல்லாவை சுற்றி வளைத்து பிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவருடைய அபுதாபி பயணத்தை ரத்து செய்தனர். அதோடு குடியுரிமை அதிகாரிகள், கேரள மாநில போலீசுக்கு இந்த தகவலையும் தெரிவித்தனர். மேலும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஹிபத்துல்லா ஒப்படைக்கப்பட்டு, அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் காசர்கோடு தனிப்படை போலீசார், ஹிபத்துல்லாவை கைது செய்து, கேரளா அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

The post அபுதாபிக்கு தப்பி செல்ல முயற்சி இணையதள மோசடியில் தேடப்பட்ட கேரள இளைஞர் சென்னையில் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chennai ,Abu Dhabi ,Hipatullah ,Malappuram, Kerala ,Kerala State Police ,Kasaragod District ,
× RELATED மோசமான வானிலையால் தரையிறக்கம் பணி...